சனிக்கிழமை காலை
விடுதியில் நானும் மௌனமும் மட்டுமே விழித்திருந்தோம்
படிப்பதற்கு Harry Potter, குடிப்பதற்கு Coffee,
Systemல் ரகுமானையும் இளையராஜாவயும் Enque செய்தேன்
தலையசைத்து கொண்டிருந்தேன் "முதல் மரியாதை" வரை
ஊரை விட்டு கிளம்பும் போது கையில் ஒரு ரூபாயை தினிக்கும் பாட்டி
கும்மியடித்து பாட்டு பாடி காசு வாங்கி செல்லும் சிறுமிகள்
மதிய உணவிர்காகவே பள்ளிக்கூடம் செல்லும் மாணவ கூட்டம்
பத்து ரூபாய் காசுக்கு நாளெல்லாம் களையெடுக்கும் பெண்கள்
நினைவில் மட்டுமே வாழும், அப்பாவின் பூர்வீகம்,
பள்ளி விடுமுறையில் சாம்பரதாயமாய் மட்டுமே சென்ற கிராமம்
அசை போடும் போது மட்டுமே நினைவில் வரும் என் மனிதர்கள்
இப்போது வந்தார்கள்..
தோழியிடம் இருந்து SMS
"நினைத்தாலே இனிக்கும் Sathyam theatreல ஓடுது போலாமா ?"
அவசரமாய் கிராமத்தை மறந்தேன், இதோ கிளம்பிவிட்டேன்
இன்னொரு சனிக்கிழமை காலை
இளையராஜா பாட்டு வரும் வரை காத்திருக்கும் என் கிராமத்து நினைவுகள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment